Column Left

Vettri

Breaking News

இன்று 164 தேர்தல் விதிமீறல்கள் பதிவு...




 


இலங்கையில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பெருமளவிற்கு அமைதியான முறையில் இடம்பெற்றதாகவும் இதுவரை 164 தேர்தல் விதிமீறல்கள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த அமைப்பு மேலும் தெரிவிக்கையில், 


தங்களிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளில் 109 முறைப்பாடுகளை உறுதிசெய்ய முடிந்துள்ளதாகவும் 55 முறைப்பாடுகளை உறுதி செய்ய முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளதுடன், அரசியல் கட்சியின் - வேட்பாளர் அலுவலகத்தின் மீது தாக்குதல்,தேர்தல் விதிமுறைகளுக்கு முரணான விதத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுதல், சட்டவிரோதமாக தேர்தல் அலுவலகங்களை பேணுதல், வாக்காளர் மோசடி அதற்கான முயற்சிகள் குறித்த முறைப்பாடுகள்இதுவரை கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது....

No comments

Subscribe Us