Column Left

Vettri

Breaking News

நிர்வாக உத்தியோகத்தரின் வீட்டில் பொருட்களை திருடிய பெண் கைது !




 


தனியார் நிறுவனமொன்றின் சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தரின் வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிய இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பாணந்துறை பின்வத்தை  பகுதியில் வசிக்கும் நிர்வாக உத்தியோகத்தர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் பின்வத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், நிர்வாக உத்தியோகத்தர் வீட்டிலிருந்து சுமார்  10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடியுள்ளார்.

அத்துடன்,  சந்தேக நபர் அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் என்பதுடன்  ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.

இவர் மற்றுமொரு இளைஞனுடன் இணைந்து நிர்வாக  உத்தியோகத்தர்  வீட்டிற்குள் ஜன்னல் வழியாக நுழைந்து இந்த பொருட்களைத் திருடியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பின்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Subscribe Us