Column Left

Vettri

Breaking News

இன்றைய வானிலை





 வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், 

வட அரைக்கோளத்தில் இருந்தும் தென் அரைக்கோளத்தில் இருந்தும் காற்று வந்து ஒருங்குகின்ற அயன அயல் ஒருங்கல் வலயமானது நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. 

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு  மணிக்குப் பின்னர்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் கூடிய  பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கிழக்கு கரையோரப் பிராந்தியங்களின் பல இடங்களிலும், தென் மாகாணத்திலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு  கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

காங்கேசன்துறை  தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 35 கிலோமீற்றர் வேகத்தில்  தென்கிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். 

வலப்பிட்டிய தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.0 ‐ 2.5 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டை சூழ உள்ள ஏனைய  கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

No comments

Subscribe Us