Column Left

Vettri

Breaking News

கிழக்கு மாகாணத்தில் அதிகரித்த வெப்பநிலை!!




 சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் கிழக்கு  மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.  

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும். 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

களுத்துறை  தொடக்கம் காலி  ஊடாக மாத்தறை  வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின்  சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில்  இருந்து  காற்று வீசும். 

கொழும்பு  தொடக்கம் புத்தளம்  ஊடாக காங்கேசன்துறை  வரையான அத்துடன்  மாத்தறை தொடக்கம்  ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்  வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

No comments

Subscribe Us