Column Left

Vettri

Breaking News

யாழில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்து உரிமையாளர்கள்!!!




 


யாழ்ப்பாணத்தில்  தனியார் பேருந்து உாிமையாளர்கள் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் இன்று (29.02.2024) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூா் மற்றும் நீண்ட துார தனியார் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நெருக்கடி 

இதனால் தனியார் போக்குவரத்து சேவைகள் மாகாண மட்டத்தில் முடங்கியுள்ளதுடன்  இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளும் சேவையில் ஈடுபட முடியாதளவு நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை சந்தித்துள்ளனா்.

பொலிஸார் தலையிட்டு சில இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளை முற்றுகையிலிருந்து விடுவித்த போதும் சுமுகமான சேவை இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், சம்பவ இடத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனியார் பேருந்து உாிமையாளர்களின் கோரிக்கை தொடர்பாக பேசுவதற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலரை ஆளுநர் மற்றும் அரச அதிபரை சந்திக்க அழைத்துச் சென்றுள்ளார். 

No comments

Subscribe Us