----VETTRI NEWS.COM---- பக்கசார்பற்ற நம்பகத்தன்மையான தகவல்கள் மக்கள் முன்...

Thursday, September 7, 2023

சனல் 4 இன் ஆவணப்படம் ஜெனிவாவுக்கான நாடகம்: அவசரப்பட தேவையில்லை என்கிறார் ரணில்

 சனல் 4 இன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆவணப்படத்தை ஜெனீவா மனித உரிமை பேரவை அமர்விற்கு முந்தைய நாடகமாக அரசாங்கம் கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக சனல் 4 இன் வெளியிட்ட காணொளி குறித்து நிதானமான விதத்தில் பதிலை வெளியிடவேண்டும் எனவும் அரசாங்கம் கருதுகின்றது.

சனல் 4 இன் ஆவணப்படம் ஜெனீவா அமர்வு இடம்பெறும் நேரத்தை மையப்படுத்தி வெளியாகியுள்ளதால் அரசாங்கம் அவசரப்பட்டு நடவடிக்கைகள் எதனையும் எடுக்ககூடாது என அமைச்சரவைக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.




எனினும் சனல் 4 குற்றம்சாட்டியவர்களே அதற்கான பதில்களை வழங்கவேண்டும் அரசாங்கம் வழங்கதேவையில்லை எனவும் அதிபர் கூறியுள்ளார்.

Share:

0 comments:

Post a Comment

About

Blog Archive