Column Left

Vettri

Breaking News

வீடற்ற 18 எம்.பி.க்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.







 மாதி வெல பாராளுமன்ற உறுப்பினர் குடியிருப்பில் வீடுகள் கிடைக்காத 18 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு கோடியே பதினாறு இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் பத்து உறுப்பினர்களுக்கு அறுபத்தேழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும், கடந்த ஆண்டு எட்டு உறுப்பினர்களுக்கு நாற்பத்தெட்டு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது .

இவ்வாறு வீடு கிடைக்காத எம்.பி ஒருவருக்கு மாதாந்தம் செலுத்தப்படும் தொகை 75000 ரூபாவாகும்.

இடப்பிரச்சினை காரணமாக எம்.பி.க்களுக்கு மத்திவெல உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் வீடுகளை வழங்க முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இதேவேளை, பாராளுமற்ற உறுப்பினர்களுக்கான மாதிவெல உத்தியோகபூர்வ வீடமைப்புத் தொகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மாதிவெல குடியிருப்பில் நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்களுக்கான வைப்புத் தொகையாக அறவிடப்பட்ட 1000 ரூபா தொகையானது மீளாய்வு செய்யப்பட்டு உரிய காலத்தில் திருத்தப்படவில்லை என கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கு வீடுகளை பெற்ற மூன்று அமைச்சர்கள் இந்த ஆண்டு மே 16ஆம் வரை அக் குடியிருப்புகளை திருப்பி ஒப்படைக்க வில்லை என்றும் தேசிய கணக்கு தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது

No comments

Subscribe Us