Column Left

Vettri

Breaking News

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் இன்று!!




கருதப்படுகின்றது. சர்வதேச ரீதியில் இக்கொடிய குற்றத்தைத் தடுப்பதற்கான சட்டகட்டமைப்புகள் காணப்பட்டாலும், தற்போதைய உலகளாவிய நிலைமையானது தொடர்ந்தும் கவலையளிப்பதாகவே ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, மனித உரிமை ஆர்வலர்கள், சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை அரசுகள் தமது மனித உரிமை கடப்பாடுகளை மீறுவதற்கான சாக்காகப் பயன்படுத்துதல் மற்றும் காணாமல் ஆக்கப்படுதலுக்கு காரணமானவர்களுக்கு எதிரான பரவலான தண்டனையின்மை போன்ற விடயங்கள் சர்வதேச சமூகத்திற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. இந்த உலகளாவிய பிரச்சினையின் தாக்கம் இலங்கையிலும் ஆழமாகப் பதிந்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்கள் தொடர்பில் இன்னும் எவ்வித தகவல்களும் உறுதியாக வெளிவரவில்லை. இதனால், காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களைத் தேடி நீண்ட நாட்களாகத் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் 'காணாமல் போனோர் பற்றிய அலுவலகம்' தாபிக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட நபர்களின் நிலை மற்றும் இருப்பிடம் குறித்த உண்மையைக் கண்டறிவதும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பதிலளிப்பதும் இதன் உத்தியோகபூர்வ நோக்கமாகும். இந்த அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையொன்றில், அவ்வாறு காணாமல் போனவர்களில் 31 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களது விபரங்கள் எவையும் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை. எது எவ்வாறாயினும், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது ஒரு தனிநபருக்கு எதிரான குற்றம் மாத்திரமன்றி, அது ஒட்டுமொத்த சமூகத்திலும் அச்சத்தை விதைக்கும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது. எனவே, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் உறுதியானதும் நியாயமானதுமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். அவ்வாறு கிடைக்கும் நீதியானது, பல ஆண்டுகளாகக் கண்ணீரோடும் நம்பிக்கையோடும் காத்திருக்கும் அந்த குடும்பங்களின் வாழ்வில் பாரிய நிம்மதியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

No comments

Subscribe Us