ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பைத் தொடர்ந்து புதிய அமைச்சரவைக்கான பதவிப் பிரமாணங்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுகின்றன. பிரதமராக தி.மு. ஜயரத்ன சற்று முன்னர் பதவியேற்றார்.
தெற்கு மாணவர்கள் மட்டுமன்றி வடக்கு மாணவர்களும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகின்றோம். எனவே அவரின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும்.
2009 தை மாதத்தில் முல்லைத்தீவை விட்டு வெளியேறிய அரச அதிபர் இமெல்டா சுகுமாரினால் 2009 மே மாதம் 18 ஆம் திகதிவரையில் அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் எவ்வாறு நேரில் கண்டதைப் போல் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியளிக்க முடியும்
கண்டி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நால்வர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொற்று நோய் தடுப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி சுதத் பீரிஸ் தெரிவிக்கின்றார்.
இளைஞர் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களிலிருந்து கூடுதலான இளைஞர் யுவதிகள் போட்டியிடவுள்ளனர் என இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
60 வருடங்களாக தொடரும் தமிழ் மக்களின் போராட்டத்தின் இறுதி இலக்கு எந்தவித அதிகாரங்களுமில்லாத மாகாண சபையல்ல. வடகிழக்கு இணைந்த மாகாணத்திற்குள் நிரந்தர தீர்வு என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டம் காணப்படுகின்றது.இதனால் ஹட்டன் - நுவரெலியா மற்றும் நுவரெலியா - புசல்லாவை ஆகிய பிரதான பாதைகளில் வாகனம் செலுத்துகின்றவர்கள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா மாவட்டச் செயலாளர் டி.பி.ஜி.குமாரஸ்ரீ அறிவித்துள்ளார்.
இன்று காலை 7.40 அளவில் பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று பதுளை கலவுட வீதியில் நாரங்கல பிரதேசத்தில் மலையொன்றுடன் மோதியதால் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து கொண்டு 18 வது அரசியல் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பபடும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
18 ஆவது அரசியல்யாப்பு திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாராளுமன்றத்திற்கு வெளியே சத்தியாக்கிரக போராட்ட ஒன்றினை ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசிய சட்டத்தரணிகள் சங்கம் புதுக்கடையிலுள்ள உயர்நீதிமன்றத்துக்கு முன்னால் இன்று நண்பகல் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டது.
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபை நடவடிக்கைகளை புறக்கணித்து சபைக்கு நடுவில் இருந்து ஆர்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து,
கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கடற்படையின் பிரதானி என சந்தேகிக்கப்படும் முத்துசாமி இலங்கோவனுக்கு எதிராக குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின்கீழ் வழக்கு தாக்கல் செய்ய
சவூதி அரேபியாவில் வேலை செய்த இலங்கைப் பணிப் பெண் ஆரியவதி தாமாகவே உடலில் ஆணிகளையும் ஊசிகளையும் அடித்துக் கொண்டுள்ளதாக இலங்கையைச் சேர்ந்த மருத்துவரும் பல்கலைக்கழக விரிவுரையாளருமான சுசிரித் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டமையை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை மூத்த பத்திரிகையாளர் ரி.எஸ். திஸநாயகம் இன்று வாபஸ் பெற்றுக் கொண்டார்.
எதிர்வரும் 8ம் திகதியை கருப்பு தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென 18வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 8ம் திகதி காலை 10 மணிக்கு பொரளை ஆயுர்வேத சந்தியில் ஆர்பாட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்று முடிந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 59 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க புறக்கணிக்கப்பட்டிருக்கின்றார்.
அரசினால் மேற்கொள்ளப்பட இருக்கும் உத்தேச அரசமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் நாட்டில் நீதியும், நேர்மையும் ஆன தேர்தல்களை ஒருபோதும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்று உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அறிவித்துள்ளது.
ஆண் ஒருவரைப் படுகொலை செய்து , சடலத்தை எரித்திருந்தனர் என்கிற சந்தேகத்தின் பேரில் மூன்று சந்தேகநபர்களை மன்னார் பொலிஸ் நிலையப் பொலிஸார் கைது செய்துள்ளார்கள்