இலங்கையின் தேயிலை உற்பத்தி கடந்த வருடத்தை விட 82.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலைச் சபையின் தலைவர் லலித் ஹெட்டியாராட்ச்சி தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணத்தில் 100 பால் உற்பத்திக் கிராமங்களை நிறுவும் திட்டதின் கீழ் இதுவரை 85 கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன என மத்திய மாகாண விவசாய அமைச்சர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்தார்.
லண்டனில் உள்ள இலங்கை வங்கிக் கிளையை பிரதான வங்கியாக மாற்றிய மைத்து அதனூடாக உலக நாடுகளில் கிளைகளைத் திறக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கைக்கான ஆடை ஏற்றுமதி கோட்டா ஜி.எஸ்.பி.(GSP+) சலுகையை ரத்துச்செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் உத்தியோகபூர்வ முன்னெடுப்புகள், இந்த மாத இறுதியில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனப் பொருளாதாரம் அனைத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கும் வகையில் கடந்த ஆண்டு 8.7 சதம் உயர்ந்துள்ளது. உலக பொருளாதார தேக்க நிலையைத் தாண்டி இந்த வளர்சி வந்துள்ளது.
2011ம் ஆண்டில் உள்நாட்டு பெற்றோல் சந்தைக்கு வரும். அதன் பின்னர் இங்குள்ள சகல வாகனங்களும் எமது பெற்றோல் மூலமே இயங்கும். என பெற்றோலிய துறை மற்றும் எண்ணெய் வளதுறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.